நிவாரணம் வழங்கக் கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கக் கோரி திருநங்கைகள் கோரிக்கை.

Update: 2021-05-19 12:37 GMT

தென்காசி திருநங்கைகள்

தென்காசியில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கக் கோரி திருநங்கைகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, மேலகரம், ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால், அரசு கோவில் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதித்துள்ளது. இதனால் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களில் குடும்ப அட்டை உள்ள ஒரு சிலருக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களும், கொரோனா நிவாரண நிதியும் கிடைத்துள்ளது. குடும்ப அட்டை இல்லாமல் பலர் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றனர்..

எனவே மாவட்ட நிர்வாகமும், அரசும் இணைந்து குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு அத்தியாவசிய பொருட்களும், நிவாரண உதவியும் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று தென்காசி சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News