குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Update: 2021-02-22 05:15 GMT

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து வறண்ட நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் காவல்துறையினர் அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளனர். தண்ணீர் வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News