தென்காசி அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள்

Today Tenkasi News -தென்காசி அருகே அடிப்படை வசதிகள் இன்றி வள்ளியம்மாள் புரம் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.

Update: 2022-10-18 07:32 GMT

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வள்ளியம்மாள் புரம் கிராம சாலையின் ஒரு பகுதி.

Today Tenkasi News -தென்காசி மாவட்டத்தில் அதிகமான கிராமங்களும் விவசாய நிலங்களுமே உள்ளன. இந்த கிராமங்களில்  பல  பெரும்பாலும் அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா நயினாரகரம் ஊராட்சிக்குட்ப்பட்டது வள்ளியம்மாள்புரம்கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே வாழும் தனி கிராமம். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பது பிரதான தொழிலாக உள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. முறையான வடிகால் நீர் ஓடை, பொது சுகாதாரம், குடிநீர் தேவைகள் என எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை.

மேலும் போக்குவரத்துக்கு தேவையான  அடிப்படை தேவையில் சாலையும் ஒன்று. ஆனால் இதுவரை சாலைபணியை முழுமைபடுத்தாமல் 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளிகுழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இது சம்பந்தமாக பல முறை ஊர் பொதுமக்கள் புகார்மனு கொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். பொதுமக்களை குறைகளை தீர்க்க முடியாத அவல நிலையில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உள்ளார்கள் .

இதனால் ஊர் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.        எனவே 3ஆண்டு காலமாக சினிமாவில் வரும் அத்திப்பட்டி கிராம் போல நிஜத்திலும் வள்ளியம்மாள்புரம் கிராம் இன்று வரை உள்ளது. அரசின் எந்த திட்டமும் முழுமையாக இந்த கிராமத்திற்கு கிடைப்பதில்லை.

எனவே இது சம்பந்தமாக முன்பிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் கண்டு கொள்ளவில்லை. தற்போது உள்ள ஆட்சிதலைவர் அனைவரின் மத்தியிலும் நற்பெயரை எடுத்து செயல்வீரராக வலம் வருபவர் என்பது பெருமைக்குறிய விஷயம் போற்றுதலுக்குறிய விஷயம்.

ஆனால் அதே போல வள்ளியம்மாள்புரம் கிராமத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நமது மாவட்ட ஆட்சியர்  நிறைவேற்றி தருவார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

இல்லையென்றால் விரைவில் ஊர் கிராம பொது மக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக உள்ளோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் முதுகெலும்பு கிராமம் தான். கிராமம் வளர்ச்சி பெற்றால் தான் நகரம் வளர்ச்சி பெறும். நகரம் வளர்ச்சி பெறும் போது அந்த மாவட்டமும் வளர்ச்சி பெறும். மாவட்டம் வளர்ச்சி பெறும் போது அந்த நாடும் வளர்ச்சி பெறும். எனவே இப்பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் செவி கொடுத்து ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News