இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பா.ம.க. அஞ்சலி

இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பா.ம.க. சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-09-18 05:19 GMT

இட ஒதுக்கீடு போராளிகளுக்கு பா.ம.க. சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 தியாகிகள் சுடப்பட்டு உயிர் நீத்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் சார்பில் ஆண்டு தோறும் வன்னிய நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தென்காசி மாவட்டம் நெடுவயல் கிராமத்தில் உள்ள வன்னியர் சங்க கட்டிடத்தில், நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நெடுவயல் வன்னியர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க தலைவர் சுப்பிரமணியன் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாநிலத் துணைத் தலைவர்கள் ஐயம்பெருமாள், சேது.ஹரிகரன், மாவட்ட தலைவர் குலாம், நெடுவயல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசக்கிமுத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் 21 தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரத் தலைவர் பழனி, நகர செயலாளர் சங்கர், செண்பககுமார், தண்டபாணி, ராஜேந்திரன், பாலையா படையாட்சி, கணபதி, சின்ன மாரியப்பன், ஆறுமுகம், சுடலை, செல்லப்பா, பரமசிவன், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க.வினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News