52 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள்

Former Student Today - 104 வருடங்கள் கடந்த தனது பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர்.

Update: 2022-07-05 07:00 GMT

முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட காட்சி.

Former Student Today - தென்காசி மாவட்டம் செங்கோட்டை கேரள சமஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தற்போது 104 வருடங்களை கடக்கிறது. தமிழகத்தின் பல இடங்களில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது மாதிரியான நிகழ்வுகளுக்கெல்லாம் அடுத்தபடியாக தான் பயின்ற பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட நினைக்கும் செங்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில், 1969 - 70 ஆண்டு காலக்கட்டத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள்.

இந்த பள்ளியில் பயின்ற ஜவஹர்லால் நேரு என்பவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து செங்கோட்டை வந்துள்ளார். அப்போது தான் பயின்ற பள்ளியை கண்டதும் தன்னுடன் பயின்ற மாணவர்களை ஒன்றிணைத்து பழைய மாணவர்கள் சங்கம் அமைக்க முடிவு செய்து, சக மாணவர்களை தேடி பிடித்து இதுவரை சுமார் 87 மாணவர்களை சேர்த்துள்ளார். அவ்வாறு இணைந்த மாணவர்கள் அனைவரையும் இன்று செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பாசத் திருவிழா நடத்தியுள்ளனர்.

அப்போது தன்னுடன் பயின்ற இருந்த முன்னாள் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொருவரும் தனது வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு சம்பவங்களையும் கலந்து உரையாடினர். இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்து, தான் பள்ளி 14 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை நூற்றாண்டு விழா நடத்தாததால் பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News