கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்- கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி

தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்ற மூடநம்பிக்கை கிராமங்களில் நிலவுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி

Update: 2021-05-19 12:31 GMT

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்ற மூடநம்பிக்கை கிராமங்களில் நிலவுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி போடாதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்த கார்த்திக் சிதம்பரம், தமிழக அரசு சார்பில் 2வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கும் போது குடும்ப தலைவர் தடுப்பூசி போட்டால் மட்டுமே வழங்க வேண்டும் என யோசனை தெரிவித்தார்.

மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் கொரோனா புள்ளி விபரங்களை சரியாக கொடுப்பது கிடையாது என குற்றம் சாட்டினார். இ- பாஸ், இ பதிவு முறைகளில் குழப்பம் உள்ளது. அதனை எளிமையாக்கிட வேண்டும் என தமிழக அரசிற்கு கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். உயிரிழப்பு அதிகமாவதால் கொரோனா இறப்பு புள்ளி விவரங்களை மறைக்காமல் உண்மையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றவர், அதிமுக அரசு கடன், நிர்வாக சீர்கேடு போன்ற பெரிய சவால்களை திமுக அரசிற்கு விட்டு சென்றுள்ளது இதனை திமுக அரசு சிறப்பாக கையாலும் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

Tags:    

Similar News