சிவகங்கை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் 66.96 சதவீதம் வாக்குகள் பதிவு

சிவகங்கை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் 66.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-20 12:11 GMT

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு நடந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் 66.96 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் 4 நகராட்சி, 11 பேரூராட்சியில் உள்ள 275 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது மொத்தம் ஆயிரத்து 1185 பேர் போட்டியிட்டனர் .திருப்பத்தூர் பகுதியில் உள்ள சில வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 420 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 66.86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் 61.51 சதவீத வாக்குகளும். தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் அறுபத்தி 66.79 சதவீத வாக்குகளும். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 73.06 சதவீத வாக்குகளும். பதிவாகியுள்ளன.

அதேபோன்று இளையான்குடி பேரூராட்சியில் 65.49 சதவீதமும். கானாடுகாத்தான் பேரூராட்சிகள் 67.33 சதவீதமும் .

கண்டனூர் பேரூராட்சியில்  76.57 சதவீதமும். கோட்டையூர் பேரூராட்சியில் 62.01 சதவீதமும். நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில்75.67 சதவீதமும். நெற்குப்பை பேரூராட்சியில் 79.91 சதவீதமும் . பள்ளத்தூர் பேரூராட்சியில் 67.93 சதவீதமும். புதுவையில் பேரூராட்சியில் 72.42 சதவீதமும். சிங்கம்புணரி பேரூராட்சியில் 72.31 சதவீதமும் . திருப்புவனம் பேரூராட்சியில் 73.43 சதவீதமும் . திருப்பத்தூர் பேரூராட்சியில் 66.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகள் மொத்தம் 66.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News