சிவகங்கை ஐடிஐ ல் குறுகிய கால தொழிற்பயிற்சிகள்: இளைஞர்களுக்கு அழைப்பு

சிவகங்கை அரசு ஐடிஐ ல் குறுகியகால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக மத்திய அரசுஅங்கீகாரம் வழங்கியுள்ளது

Update: 2022-03-22 07:00 GMT

சிவகங்கை ஐடிஐ ல் குறுகியகால  தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேசிய கல்வி கொள்கைபடி, சிவகங்கை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் குறுகியகால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக மத்திய அரசுஅங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து,ஆகிய தொழில்பிரிவுகளில், குறுகியகால பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில், சேருவதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் , பயிற்சியில் சேருவதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ,14 முதல் 45 வயது உள்ளவராக இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்றவர்கள் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி முடித்து தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு இத்துறையின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு, சிவகங்கை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் வி.வெங்கடகிருஷ்ணனை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போன்: 9942099481 .

Tags:    

Similar News