சிவகங்கை-நடமாடும் காய்கறிகள் வாகனங்களை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக மொத்தம் 51 வாகனங்களுக்கு அனுமதி

Update: 2021-05-24 06:56 GMT

சிவசங்கை நகராட்சி ஆணையர் ஐயப்பன்.

சிவகங்கை நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறிகள் அங்காடி வாகணங்களை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் நடமாடும் வாகன மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தினந்தோறும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிவகங்கை நகராட்சி சார்பில் சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக 23 தள்ளுவண்டிகளும், 28 குட்டியானை வாகனம் என மொத்தம் 51 வாகனங்களுக்கு அனுமதி பாஸ் வழங்கப்பட்டது.

காய்கறிகள் விற்பனை வாகனத்தை சிவகங்கை நகராட்சி ஆணையாளர்  தொடங்கி வைத்தனர். வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை ஆவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஊரடங்கு விதிக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் காய்கறி விற்பனை நடைபெறும் என்றும், அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை நடைபெறுகின்றதா என அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என நகராட்சி ஆணையர் ஐயப்பன் தெரிவித்தார்.

Tags:    

Similar News