வேனில் கடத்தப்பட்ட 1.5 டன் ரேசன்அரிசி பறிமுதல்

Update: 2021-03-05 04:45 GMT

சிவகங்கையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மினிவேனில் கடத்தி வரப்பட்ட 1.5 டன் அளவிலான ரேசன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை கல்லூரி சாலையில் தாசில்தார் மகிளாவதி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காளையார்கோவிலில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற மினிவேன் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்ட நிலையில் அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவரவே வேனில் வந்தவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் வேனில் வந்தவர்கள் மானாமதுரையை அடுத்த மல்லவராயனேந்தல் பகுதியை சேர்ந்த பிருந்தாவன் எனவும் வேனை ஓட்டி வந்தவர் நந்தகுமார் என்பதும் இருவரும் ரேசன்அரிசி கடத்தி வந்ததும் தெரியவரவே உடனடியாக அவர்கள் இருவர் மற்றும் கடத்தி வரப்பட்ட 1.5 டன் அளவிலான ரேசன்அரிசியையும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News