சோளிங்கர் அருகே பிரசவத்தின் போது ஏற்பட்ட பாதிப்பில் பெண்பலி

சோளிங்கர் அருகே பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் பெண் பலியானதால் மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகையிட்டனர்

Update: 2021-06-22 16:06 GMT

சோளிங்கர் அருகே பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் பெண் பலியானதால் மருத்துவமனையைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகையிட்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்டரம் பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த கோபி. இவருக்கும் நித்யா என்றவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நித்யாவிற்கு இன்று மதியம் பிரசவ வலி ஏற்படவே கொடைக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு  அளித்த சிகிச்சையில்  ஆரோக்கியமான  நிலையில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது நித்தியாவிற்கு  ஏற்பட்ட அதிக அளவில் ரத்தப்போக்கில், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல்  ஏற்பட்டு ஆபத்தான நிலையில்  நித்தியா, குழந்தை இருவரையும் மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு  சில மணி நேரத்திலேயே நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனால் ஆத்திரமடைந்த நித்யாவின் உறவினர் மருத்துவர்களின் மெத்தனமே  நித்யாவின் மரணத்திற்கு காரணம் என்று, மருத்துவமனைக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேல்சிகிச்சைக்காக வந்த பெண்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வாலாஜாப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது..

இது குறித்து தகவலறிந்த இராணிப்பேட்டை டிஎஸ்பி பூரணி மருத்துவமனைக்கு வந்து அதிகாரிகளிடம் நித்யா உயிரிழந்ததுபற்றி விசாரித்தார். மேலும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நித்யாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

Tags:    

Similar News