அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்

வாலாஜாப்பேட்டை அடுத்த அம்மன்தாங்கல் கிராமத்தில் சாலை மற்றும்அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

Update: 2021-08-25 01:15 GMT

அடிப்படை வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மன்தாங்கல்  கிராமப் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்  மக்கள், சாலை ,கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல்  அவதியுற்று வருகின்றனர் .

இதுகுறித்து ,வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனுக்களை பலமுறை அளித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், அங்குள்ள சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளைக் கண்டித்தும்,கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றக் கோரியும். கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாலாஜா போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கை விட்டனர். இதனால்  அந்த பகுதியில் சுமார் 1மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags:    

Similar News