வாலாஜாப்பேட்டை யில் 21 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

வாலாஜாப்பேட்டை வட்டத்தில் இடமாற்றமான 21 கிராம நிர்வாக அலுவலர்களும் பணியில் சேர்வதற்கான கடிதத்தை துணை வட்டாட்சியரிடம் வழங்கினர்

Update: 2021-08-06 13:57 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட 55 கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களில், நரசிங்கபுரம், நவ்லாக் புளியங்கண்ணு, சீகராஜபுரம், வாணாபாடி முகுந்தராயபுரம் உள்ளிட்ட 21 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு  கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது. அதனையடுத்து, கோட்டாட்சியர், 21 பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

எனவே, அவரது உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 21 பேரும் இடமாறுதல் உத்தரவினைப் பெற்று அவரவர் பணியிடங்களில் சேருவதற்கான கடிதங்களை வாலாஜாப்பேட்டை தலைமை அலுவலக துணை வட்டாட்சியர் பொறுப்பு பாலாஜியிடம் வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் துணை வட்டாட்சியர் பாலாஜி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News