இராணிப்பேட்டை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 486 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

மாவட்டத்தில் மொத்தமுள்ள 2648பதவிகளுக்கான தேர்தலில்486 பதவிகளுக்போட்டியின்றிதேர்வாகி உள்ளனர்.

Update: 2021-09-26 09:55 GMT

பைல்படம்

இராணிப்பேட்டை மாவட்டஊரக உள்ளாட்சி தேர்தலில் 486பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது தேர்தலில் போட்டியிட , வேட்புமனுதாக்கல் கடந்த 15ந்தேதிமுதல் 22ந்தேதிவரை நடந்தது.தேர்தலில் போட்டியிடதிமுக,அதிமுக, பாஜக, விடுதலைசிறுத்தைகள் கட்சி, ,நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் ஆர்வத்துடன்    தங்களது மாவட்டத்திலுள்ள 2,648 பதவிகளுக்கு 7651பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் மனுக்கள் 23ந்தேதிி  வரை பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் 91பேர்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது

பின்னர் 26ந்தேதி   989மனுக்கள் வாபஸ்பெறுவது நிறைவடைந்தது. பின்னர், மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில்127ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,13மாவட்ட ஊராட்சி வார்டுகள்,288கிராம ஊராட்சிகள்2220 கிராம ஊராட்சி வார்டுகளும் , என உள்ள 2,648 பதவிகளில்,,486பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 2162 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்  நடக்க உள்ளது.

எனவே தேர்தலில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள்,பஞ்.தலைவர்கள்மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கான சுயேட்சைகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணிகள் நிறைவடைந்தது.தேர்தல்,வாலாஜாப்பேட்டை,  ஆற்காடு,திமிரி ஆகிய 3ஊராட்சி ஒன்றியங்களில் 1179பதவிகளுக்கு முதற்கட்டமாக வரும் 6ந்தேதி நடக்க உள்ளது.

தேர்தலில் போட்டியிட 3271 பேர் வேட்பு தாக்கல் செய்துள்ளனர் 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 354,பேர் மனுக்களை வாபஸ்பெற்றனர். அதனைத்தொடர்ந்து,178 பதவிகளுக்கு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு மீதமுள்ள 1001பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.   

அதேபோல,காவேரிப்பாக்கம், சோளிங்கர்,அரக்கோணம்,நெமிலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில்1469 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக 9ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது

அதில்,. போட்டியிட 4380பேர் மனுதாக்கல் செய்தனர் 59 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு,635பேர் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். எனவே3278பேர்தேர்தலில்போட்டியிடவேட்பாளர்களஉறுதிசெய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில்,1469பதவிகளில்308பதவிகளுக்கு போட்டியின்றிதேர்வாகினர் அதனைத்தொடர்ந்து  மீதமுள்ள1161 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது

13மாவட்ட  வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 95, மனுக்களில் 10,தள்ளுபடி செய்யப்பட்டு,17 பேர்வாபஸ் பெற்ற நிலையில்  68,பேர்  போட்டியிடுகின்றனர்.127ஒன்றிய வார்டுகளில்  தாக்கலான  684 ல்,11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 165பேர் மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில் 508 பேர்  வேட்புமனுக்கள் உறுதி செய்யப்பட்டது.

288 ஊராட்சி மன்ற தலைவர்பதவிக்கு 1247 பேர் வேட்புமனுசெய்தனர். அதில் 27மனுக்கள் தள்ளுபடியாகிய நிலையில் 319பேர் வாபஸ் பெற்றதைத்தொடர்ந்து, 27பேர் ஊராட்சி தலைவர்களாக போட்டியின்றிதேர்வுசெய்யப்பட்டு உள்ளனர்.

மீதமுள்ள261பஞ்.தலைவர்பதவிகளுக்கு 879பேர்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு போட்டியிடும் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,2220கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கலான 5625ல் 73, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 808 பேர் வாபஸ்பெற்றதால்757இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனால், மீமுள்ள இடங்களில் 4630பேர் தேர்தலில் போட்டியிட உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 2648பதவிகளுக்கான தேர்தலில்486 பதவிகளுக்போட்டியின்றிதேர்வாகி உள்ளனர். போட்டியுள்ள  2162 பதவிகளுக்கு 6085பேர் வேட்பாளர்களாக உறுதிசெய்யப்பட்டு தேர்தலில்போட்டியிட அறிவிக்ப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News