இராணிப்பேட்டை சிப்காட் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இராணிப்பேட்டை சிப்காட் அருகே கார் குறுக்கே வநத்தால் கட்டுப்பாட்டை இழந்த டாங்கர்லாரியுடன் கேஸ்டேங்கர் டிரைய்லர் லாரி நேருக்கு ஏர் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2022-01-06 16:59 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ,சிப்காட் அடுத்த  ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே தேசியநெடுஞ் சாலையில் சித்தூர்நோக்கி கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது .

அப்போது எதிரே சென்னை நோக்கி வந்த காலி கேஸ் டேங்கர் டிரைலரை கார் ஒன்று முந்திசென்றதாகவும், அதன் காரணமாக நிலைத்தடுமாறிய லாரியும் டிரைலரும் நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் ஓட்டுநர்கள் சின்னராஜி, ரங்கனகவுடா படுகாயமடைந்தனர் . இருவரையும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . விபத்து குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.ல்

Tags:    

Similar News