வணிகர்நல வாரியத்தில் உறுப்பினராக வணி கர்களுக்கு கலெக்டர் அழைப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.40 லட்சம் வரை விற்பனை செய்யும் வணிகர்கள், வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக கலெக்டர் அறிவுறுத்தல்

Update: 2021-08-27 10:17 GMT

 இராணிப்பேட்டையில் நடைபெற்ற வணிகர் நல வாரியம் குறித்த ஆலோசனை கூட்டம் 

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறு,குறு வணிகர்களை வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக்கி வாரியம் செயல்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கிப் பேசினார்

அப்போது, தேர்தல் வாக்குறுதியின் படி வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு,  சிறு, குறு வணிகர்களை  அனைவரையும்  உறுப்பினர்களாக்கிடவும்  வாரியங்களின் மூலமாக நலதிட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாரியம் செயல்பட  ஏதுவாக  அவர்களை சரக்கு மற்றும் சேவை வரியில்(GST) பதிவு செய்த மற்றும் ஆண்டிற்கு ரூ.40லட்சத்திற்கும் கீழ் விற்பனை செய்து வரும் பதிவு செய்யாத வணிகர்களை நல வாரியத்தில் உறுப்பினராக்கி அரசின் நலதிட்டங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

1989ல் தொடங்கப்பட்ட வணிகர்கள் நல வாரியத்தில் குறைந்த அளவே உறுப்பினர்களாக உள்ளனர். வணிகர்களுக்கு, இயற்கைப்பேரிடர், நோய்தொற்று காலங்களில் அரசு வழங்கும் நல திட்டங்கள்யாவும் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்று வருகிறது. இதில் அனைத்து சிறு,குறு வணிகர்களும் நலதிட்டங்களைப்பெற்று பயனடைய வேண்டுமென்பது அரசு நோக்கமாகும்.

வாரியத்தில் சேர உறுப்பினர்கட்டணம் ரூ.500ஐ கடந்த 15-7-2021முதல் 14-102021 வரை 3மாதங்களுக்கு கட்டண விலக்கை அரசு  அளித்துள்ளது. எனவே,  ஆண்டிற்கு ₹40லட்சம் வரை விற்பனை செய்து வரும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்போது உறுப்பினராக கட்டணமில்லை என்பதையும் தெளிவுபடுத்தி ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கையை அலுவலர்கள் அதிகரிக்க வேண்டும்.

வாரியத்தில் உறுப்பினரான வணிகருக்கு மருத்துவம், குழந்தைகள் கல்வி, விபத்து காப்பீடு ஆகியவை வாரியங்கள் மூலமாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்களை வணிகர்களிடையே எடுத்துரைத்திட வேண்டும்  என்று  மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறினார்.

ஆய்வுக்கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் முகம்மது ஹர்ஷத், உதவி ஆணையர்கள் பிரகாஷ், சத்தியகுமார் மற்றும் அனைத்து நகராட்சிஆணையர்கள்,பேரூராட்சி செயல் அலுவலர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News