மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன், ஸ்கூட்டர் இலவசம்: கலெக்டர் அறிவிப்பு'

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயது நிறைவான மாற்று திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன்,ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படுவதாக கலெக்டர் அறிவிப்பு

Update: 2021-11-04 15:57 GMT

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் பட்டபடிப்பு படித்து வருகின்றவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மற்றும் 18 வயது பூர்த்தியடைந்து சுயதொழில் புரிந்து வரும் கண் பார்வையற்றவர்கள், செவித்திறன் இல்லாதவர்களுக்கு ஸ்மார்ட்போன் இலவசமாக  வழங்கப் படுகிறது.

அதேபோல் 18 வயதிலிருந்து 45 வயதுக்குள் உள்ள கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, செவித்திறன் அற்றவர்களுக்கு மற்றும் 75% க்கும் மேல் மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட  உள்ளது.

மேலும் ,18 வயதடைந்து இருகால்களும் பாதிப்படைந்த சுயதொழில் புரிபவர்கள், மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

தசைச்சிதைவு நோய், விபத்து ஏற்பட்டு கைகால் இழந்துள்ளவர்களுக்கு பேட்டரியில் இயங்கும்  நவீனசற்கர நாற்காலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படிவற்றை பெறுபவர்களுக்கு வருமான வரம்பு எதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார், கல்விபயின்று வரும் விபரம், அவற்றின் சான்று, தனியார் நிறுவன ஊழியர் எனில் அதற்கான ஆதார விபரங்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழில்.குறித்த சான்றுகள் ஆகியவற்றின் நகல் , 2 பாஸ்போட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வரும் 12-11-2021க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ,இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை, 632401 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்..

மேலும் ,விபரங்கட்கு 04172-247177 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு மேற்படி தகுதியுள்ள மாற்றுதிறனாளிகள்  விண்ணப்பித்து பயனடையுமாறு இராணிப்பேட்டை மாவட்டாட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்...

Tags:    

Similar News