விதவிதமான விநாயகர் சிலைகள்; வாங்கத்தான் ஆளில்லை

வாலாஜா பஜாரில் விற்பனைக்கு வந்த விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனையின்றி காணப்பட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி

Update: 2021-09-10 07:50 GMT

வாலாஜாவில் மக்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளி

ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாப்பேட்டை பஜார் வீதியில் விநாயகர் சதூர்த்தியையொட்டி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆண்டுதோறும் விதவிதமான வடிவங்களில் வண்ணமிட்ட களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய கொண்டுவரப்படுகிறது

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களைகட்டி காணப்படாத விழா இந்த ஆண்டு அரசு வழங்கியுள்ள தனிநபர் குடும்பத்துடன் விநாயகர் சிலையை வீட்டிலேயே வைத்து வழிபட கட்டுப்பாட்டுடன் கூடிய விழாவிற்குஅனுமதியை வழங்கியது. அதன் காரணமாக உற்சாகமடைந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் சிலைகளை செய்து நேற்று முதல் வழக்கம்போல வாலாஜாப்பேட்டை பஜார் வீதியில் உள்ள கடைகள் அருகே விற்பனைக்காக கொண்டு வந்து  வைத்துள்ளனர்.

ஆனால், மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்த அவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது .எப்போதுமே இதுபோன்ற விசேஷ நாட்களில் அதிக மக்கள் கூட்டத்துடன் காணப்படும் வாலாஜாப்பேட்டை பஜார் வீதி விநாயகர் சதுர்த்தி தினம் இன்று  சாதாரண நாட்களில் உள்ள கூட்டத்தை விடவும் குறைந்தே காணப்பட்டுள்ளது..

இதனால் கடந்த 3 மாதங்களாக குடும்பத்துடன் உழைத்து விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்கு கொண்டு வந்த மண்பாண்டதொழிலாளர்கள் விரக்தியடைந்து காணப்பட்டனர். அதே போல கொடை., பூ மற்றும் பழ வகைகள் கடைகளும் மக்களின்றி வெறிச்சோடியாதால் வியாபாரிகளும்  வேதனையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News