தேர்தலில் குற்ற செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது செய்ய முடிவு

ராணிப்பேட்டை மற்றும் 3 மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-01 10:24 GMT

தேர்தலின்போது  குற்ற செயல்களைத் தடுக்க ரவுடிகள் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மற்றும் 3மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும், 19 ல் நடக்கிறது. தேர்தலின் போது குற்றச்சம்பவங்கள் நடக்காமலிருக்க ரவுடிகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதில் வேலுார் மாவட்டத்தில் 756, ராணிப்பேட்டை, 345, திருப்பத்துார் மாவட்டத்தில் 300 என 1,401 ரவுடிகள் உள்ளதாக போலீசார் நடத்திய ஆய்வில்  தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடியும் வரை எந்தவித கலவரத்திலும் ஈடுபட மாட்டோம் என அவர்களிடம் போலீசார் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கி வருகின்றனர். இருப்பினும் அதிகளவு குற்றச்செயல்களில் ஈடுபடும் 450 ரவுடிகளை தேர்தல் முடியும் வரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  தலைமறைவாகி விட்ட ரவுடிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News