இராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மார்க். கம்யூ., தனித்து போட்டி

ராணிப்பேட்டை, மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இடம் ஒதுக்காததால் மார்க்., கம்யூ.,கட்சியினர் தனித்து போட்டியிட்டுள்ளனர்

Update: 2021-09-27 07:15 GMT

தமிழகத்தில் கடந்த பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் திமுகவுடன்.,மார்க். கம்யூ.,  கட்சியினர் கூட்டணி வைத்து தேர்தல் பணியாற்றி வந்தனர். தற்போது 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்துள்ளது.

அதில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்குமாறு நீர் வளத்துறை அமைச்சரும், திமுக., பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் மார்க். கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி , முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், ராமச்சந்திரன், இந்துமதி, ரகுபதி தரப்பினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வேலுார் மாவட்டத்தில், கணியம்பாடி, குடியாத்தம், கொண்ட சமுத்திரம் ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் கேட்கப்பட்டது. அதில் குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை மூங்கப்பட்டு மட்டும் மார்க். கம்யூ., கட்சிக்கு  ஒதுக்கப்பட்டது. பின்பு ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் சீட் ஒதுக்கும்படி மார்க். கம்யூ., நிர்வாகிகள் கேட்டுள்ளனர். அதற்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், பிரநிதிகள், ஒன்றிய செயலாளர்களுடன் பேசும்படி துரைமுருகன் கூறினார்.

இதுகுறித்து மார்க். கம்யூ., கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:  ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், துணி நுால் துறை அமைச்சருமான காந்தியிடம் பேச சென்றால்  அவர், ஆற்காடு எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பனிடம் பேசும்படி கூறினார். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மார்க். கம்யூ., யினர் தங்களுக்கு சாதகமான இடங்களில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர். திமுக., சீட் ஒதுக்கும் பட்சத்தில் மற்றவற்றில் வாபஸ் பெற முடிவெடுத்திருந்தனர்.

இருப்பினும்,வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில், தங்கள்மனுக்களை வாபஸ் பெறும்படி திமுக., நிர்வாகிகள் கூறினர். அவர்கள், ஒரு இடம் கூட ஒதுக்காத போது நாங்கள்  எப்படி வாபஸ் பெறுவது. எனவே நீங்கள் தான் வாபஸ் பெற வேண்டும் என மார்க். கம்யூ., நிர்வாகிகள் கூறி விட்டனர். அதை தி.மு.க., ஏற்கவில்லை.

எனவே, மனு தாக்கல் செய்த திமிரி ஒன்றியம் மாம்பாக்கம், மேலப்பழந்தை, வாழப்பந்தல்  3ஒ ன்றிய கவுன்சிலர்  இடங்கள், திமிரி ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர், வாலாஜாப்பேட்டை ஒன்றியத்தில்  செட்டித்தாங்கல், லாலாபேட்டை, பெல் ஆகியவை அடங்கிய மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு மார்க்., கம்யூ தனித்து போட்டியிட முடிவு செய்தது.

அதேபோல,,திருப்பத்துார் மாவட்டத்தில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவி ஒதுக்கும்படி கேட்டதில், அம்பலுார் ஒன்றிய கவுன்சிலருக்கு மட்டும் சீட் வழங்கியது. ஆனால் அங்கு மனுதாக்கல் செய்து போட்டியிடும் திமுக., வேட்பாளர் வாபஸ் வாங்கவில்லை. இதனால் திருப்பத்துார் மாவட்டத்திலும் மார்க். கம்யூ., தனித்து போட்டியிடுகிறது.

ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் மார்க்., கம்யூ கட்சிக்கு 50 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளதாகவும்,  அக்கட்சியினர் போட்டியிடும் பகுதிகளில் அவர்களுக்கு ஓட்டு  விழும். அவர்கள் போட்டியிடாத இடங்களில் (திமுகவை எதிர்த்து) யாருக்கு ஓட்டு போடுவது என்ற ஆலோசனையில் மார்க.,கம்யூ,. கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திமுக.,வினர் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை. இதுகுறித்து திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு தெரியுமா என தெரியவில்லை. இதுகுறித்து ,திமுக., பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிர்ச்சியடைந்து உள்ளதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர். மார்க். கம்யூ., போட்டியிடுவதால் ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் தி.மு.க., வின் வெற்றி கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News