மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் காலமானார்

ராணிப்பேட்டையை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இன்று மாரடைப்பால் காலமானார்

Update: 2021-03-23 12:18 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இன்று வாலாஜா பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக அதிமுக வேட்பாளர் எஸ் எம் சுகுமார் அவர்களுடன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இருந்தார்.

உணவு இடைவேளையின் போது முகமது ஜான் ஓய்வு எடுப்பதற்காக தனது இல்லத்திற்கு சென்று உணவு அருந்திய பின்னர் மீண்டும் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு தயாரான நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

65 வயதான மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News