விபத்தில் கண்ணை இழந்த செவிலியர்; மருத்துவச் செலவை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் கண்ணையிழந்த நர்ஸின் மருத்துவச் செலவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Update: 2021-06-01 04:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப் பேட்டையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக நர்ஸாக பணியாற்றிவருபவர்  இந்து. இவர்  கடந்த 23ந்தேதி பணியின் போது மருத்துவரின் பரிந்துரையின்பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்ஸிஜனை செலுத்த முயற்சித்தார், அப்போது ஆக்ஸிஜன் ஃபுளோ மீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென ஆக்ஸிஜன் பீறிட்டு வெளியேறி நர்ஸ் இந்துவின் இடது கண்ணில் தாக்கியது. உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக  வேலூருக்கு அனுப்பப்பட்டார், 

இருப்பினும் இந்து தனது இடது கண்பார்வையை இழந்தார். இவ்விபத்து குறித்து தகவலறிந்த இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ்,  நர்ஸ் இந்துவின் ஏழ்மை நிலையைக் கருதி அவரின் சிகிச்சைக்கான தொகை ₹ 45616ஐ கொரோனா சிறப்பு நிதியிலிருந்து வழங்கினா.ர் மேலும் இந்துவை பணி நிரந்தரம் செய்யவும் பரிந்துரைச் செய்தார்

Tags:    

Similar News