ராணிபேட்டை காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது

Update: 2021-03-30 12:52 GMT

ராணிப்பேட்டையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும்,  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைவீரர்கள் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்பை ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கே.டி. பூரணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பயிற்சி லட்சுமி பிரியா, ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 10 தலைமைக் காவலர்கள், காவலர்கள், மத்திய பிரதேச சிறப்பு ஆயுதப் படையில் இருந்து காவல் ஆய்வாளர் தன்னலால் காஸ்ட் மற்றும் இவர்களுடன் இரண்டு உதவி ஆய்வாளர்கள், 65 படைவீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறையினர் பேண்ட் வாத்தியத்துடன் வாலாஜா வீட்டுவசதி வாரியத்தில் இருந்து துவங்கி வாலாஜா பேருந்து நிலையம் வழியாக வாலாஜா அரசு மருத்துவமனை வெளியே மோட்டூர் சந்திப்பில் இந்த அணிவகுப்பு  நிறைவு பெற்றது.

Tags:    

Similar News