மதுக்கடைகளுக்கு எதிராக இராணிப்பேட்டையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

இராணிப்பேட்டையில் பாமக வினர் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நின்று மதுக்கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-17 08:34 GMT

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10ந்தேதேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. பின்னர் ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து இம்மாதம் 14ந்தேதி முதல் கடைகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியதின் பேரில் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனைகள் நடந்து வருகிறது

இந்நிலையில் கடைகளைத் திறந்ததிற்கு எதிராக அரசைக்கண்டித்து பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கையினை வெளியிட்டார் . அதில் இன்று மாநிலம் முழுவதும்  வீடுகளுக்கு முன்பாக  திறந்துள்ள மதுக்கடைகளுக்கு எதிராக  தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக  அறிவித்திருந்தார்.

அதன் பேரில் இராணிப்பேட்டையில் இன்று காலை மாநில வன்னியர் சங்க செயலாளர் முரளி , அவரது வீட்டின் முன்பாக பாமக நிர்வாகிகள் பழனி ந.செ,கஜேந்திரன் ந.த,வழக்கறிஞர்பிரிவு ஜாணகிராமன் பெரியதாங்கல்,மூர்த்தி,மற்றும் கட்சியினருடன் சேர்ந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்த அரசைக் கண்டித்தும், திரும்ப மூடக்கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்  நடத்தினர். இதேபோல இராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த நாராயணபுரத்தில.  பாமக ஓ.தலைவர் சுதாகர் வீடு முன்பாக அவரது தலைமையில் நட்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஒ.வன்னியர் சங்க செயலாளர் ஜெகன்,கட்சியினர்   ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கன்னிகாபுரத்தில் லட்சுமணன் ஒசெ தனது வீட்டின் முன்பாக கட்சியினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Similar News