இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெறப்பட்ட 7651 வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது

Update: 2021-09-25 02:41 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்திலுள்ள 2,648 பதவிகளுக்கு திமுக, அதிமுக,பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் 7651 பேர் ஆர்வத்துடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்,

மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 127 ஊராட்சி ஒன்றிய வார்டுகள்,13 மாவட்ட ஊராட்சி வார்டுகள் 288 கிராம ஊராட்சிகள் 2220 கிராம ஊராட்சி வார்டுகளும் என 2,648 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 1179 பதவிகளுக்கு முதற்கட்டமாக வரும் 6ந்தேதி நடக்க உள்ள தேர்தலில் போட்டியிட 3271 பேர் வேட்பு தாக்கல் செய்துள்ளனர்

மனுக்களில் 32 தள்ளுபடி செய்யப்பட்டு 3239 பேர் வேட்புமனுக்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேபோல, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், நெமிலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் 1470 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது

.அவற்றில் போட்டியிட 4380 பேர் மனுதாக்கல் செய்தனர். அதில் 47 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4333 பேர் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 95 மனுக்களில் 7 தள்ளுபடி செய்யப்பட்டு 88 வேட்பு மனுக்களும், 127ஒன்றிய வார்டுகளுக்கு தாக்கலான 684 ல்,11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 673 வேட்புமனுக்களும், 288 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 1247 பேரில் 10 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1237 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

மேலும், 2220 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கலான 5625 மனுக்களில் 51 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 5574 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News