தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, துவக்கி வைத்த கலெக்டர்

இராணிப்பேட்டையில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Update: 2021-09-02 17:11 GMT

ராணிப்பேட்டையில் ஊட்டச்சத்து வார விழாவை கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பாக தேசிய ஊட்டச்சத்துவாரவிழா (போஷன் அபியானி) விழா நடந்தது.

விழாவை, கலெக்டர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பின்பு அவர்பேசியதாவது.:

ஒரு நாடு தன்னிறைவு பெற்று வளர்ந்த நாடு என்று சில குறியீடுகளை வைத்துள்ளது. அதில்,..மக்களின் சுகாதாரம் கல்வித் தரமிடன் முழுமையாக கிடைத்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை  மூன்றும்  அனைத்து மக்களுக்கும் கிடைக்க வளர்ந்த நாடுகள் உறுதி செய்துள்ளன.

அதில், நமது நாடும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் சூழலை வழங்கி. பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட துறையின் மூலம் ஆரோக்கியமான  வாழ்க்கையை மேம்படுத்திடும் அங்கன்வாடி பணியாளர்களின் பணி, மகத்தானது

. குழந்தைகள் பிறந்து ஆயிரம் நாட்கள்வரை தொடர்ந்து கண்காணித்து ஆரோக்கியமாக வாழ தேவையான அனைத்து ஆலோசனைகளையும் உணவு முறைகள், சுகாதார அறிவுரைகள் வழங்கி கண்காணித்து வருகின்றனர்.

10 வருடத்திற்கு முன்பு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

இதனால் ஆரோக்கியம் மற்றும்  சுகாதாரம் மிகவும் பின் தங்கி கிராமங்களில் இரத்த சோகை நோய் மற்றும் குள்ள தன்மை ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவு கண்டறியப்பட்டன.

எனவே, ஊட்டசத்து குறைபாடுகளை  போக்க  தேசிய அளவில் தமிழ்நாடு சிறப்பான பணியை மேற்கொண்டு ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைத்து  வருகின்றது..

நமது நாடு, வளர்ந்த நாடுகள் இணையாக வளர வேண்டுமென்றால் ஆரோக்கியமான மக்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலே குறியீட்டை எளிதில் அடைந்திட முடியும்.

அங்கன்வாடி பணியாளர்கள் கிராம அளவில் தாய்மார்கள் ,குழந்தைகளின் நலன் பொது சுகாதார நிலைமை ஊட்டச்சத்து உணவு முறைகள் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிரமாக  கண்காணித்து ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு உள்ளது.

இரத்த சோகை குறைபாட்டை முழுமையாக அகற்றிட வட்டாரஅளவில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சிகள் அதிகளவில் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்

ஊட்டச்சத்து உணவு வகைகள் ,கிரை வகைகள் இயற்கை உணவுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து பழ வகைகள் கீரை வகைகளை பயிரிட்டு கிராம பகுதியில் உள்ள ஏழை எளிய தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கிட  வேண்டும்

. அதற்கு  தேவையான நிதி  ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும். ஆகவே இதனை பயன்படுத்தி அங்கன்வாடி பணியாளர்கள்  கிராமப்புறங்களில் பெண்களும் குழந்தைகளும்  ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை உருவாக்கிட சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

இன்றைய கொரோனா காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தாய்மார்களின் சுகாதாரத்தை பேணி காத்திட கொரோனா தடுப்பூசி போடும் பணியை பொது மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் மாவட்டத்தில் 30-ஆம் தேதிக்குள் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி என்றஇலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

இலக்கை எய்திட அங்கன்வாடி பணியாளர்களின் பணி மிகவும் இன்றியமையாதது  அனைவரும் உறுதுணையாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இதனையடுத்து ஊட்டச்சத்து குறைபாடுள்ள 3,குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவுகளையும் ,ஆரோக்கியமான 3, குழந்தைகளுக்கு சுகாதார பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து, மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 205 குழந்தைகளுக்கு சுகாதார தொகுப்புகள், அங்கன்வாடி மையங்களில்  வளர்க்க  பழச்செடிகளை  வழங்கினார்.

பின்னர், கருட சேவ டிரஸ்ட் என்ற நிறுவனத்தினர் குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவுகள், சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி உதவியதற்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் ,

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .லோகநாயகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோமதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், கருடா சேவா டிரஸ்ட் தலைவர் விஸ்வநாதன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News