2.5 மெகாவாட் திறனில் சோலார் மின்உற்பத்தி நிலையம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

இராணிப்பேட்டை சிட்கோ பினிஷ்டு லெதர் சுத்திகரிப்பு நிறுவனம் சார்பில் 2.5 மெகாவாட் திறன் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

Update: 2021-12-22 12:59 GMT

2.5 மெகாவாட் திறன் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை தொடங்கி  வைத்த அமைச்சர் காந்தி 

ராணிப்பேட்டை மாவட்டம்,  இராணிப்பேட்டை  சிட்கோ பினிஸ்டு லெதர் எப்ளுயண்ட் டீரீட்மெண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் 2.5 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலையின் திறப்புவிழா, இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில், சிட்கோ -1 சிஇடிபி நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார்.

அவரைத் தொடர்ந்து , தொழில்நுட்ப இயக்குநர் ரவிந்திரநாத்,  சிஇடிபி ரமேஷ்பிரசாத், தோல் ஏற்றுமதி கவுன்சில் நிர்வாக இயக்குநர் செல்வம்,  தோல் ஏற்றுமதி நிர்வாக கவுன்சில் தலைவர் இஸ்ஸார் அகமது,  திமுக சுற்று சூழல் அணி இணைசெயலாளர் வினோத்காந்தி , தோல் திறன் கவுன்சில் தலைவர் அகீல்அகமது் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்பு விழாவில்  இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் சிறப்புரையாற்றினார்..

பின்னர் விழாவில் , சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து பேசினார். அதில் அரசு தொழில்துறைகளுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது வேலைவாய்ப்புகளை பெருக்க வேண்டும்  தோல் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது .சுற்று சூழல் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக அக்கறைக் கொண்டுள்ளது . எனவே தொழில் நிறுவனங்கள் சிறப்புடன் சுத்திகரிப்புசெய்யும் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் . மாசு நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் என்பதை தெரிந்துசெயல்படுமாறு கேட்டுக்கொண்டார் . மேலும் ஜவுளித்துறைபோல,தோல்துறையும் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர்கூறினார்..

விழாவில் ,  தோல் பொருட்கள் உற்பத்தி யாளர்கள், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News