ராணிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடபுத்தகங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

Update: 2021-06-26 10:35 GMT

ராணிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடபுத்தகங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மற்றும் நிதி உதவி பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு நடப்பு கல்விபருவத்திற்கான பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்  பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது

அதில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கி விழாவினைத் துவக்கி வைத்தார் .சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாணவ, மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினார். பின்னர் விழாவில் அமைச்சர் காந்தி பேசியதாவது:

தமிழத்தில் அரசு பள்ளிகளின் கல்வி தரமானதாக உள்ளது தனியார் பள்ளிக்கு நிகராக இருக்க வேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.

அரசு சார்பில் மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை அவர்கள் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொண்டு அவர்களது கல்வி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  தற்போது அரசு பள்ளியில் பயில்வதற்காக மாணவர்களின் சேர்க்கையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் பள்ளிகளின் கல்வி தரமானதாக உயர்ந்துவருகிறது அதற்கு ஆசிரியர்களின் முழு பங்களிப்பு மட்டுமே காரணம் என்று அவர் பேசினார்.

விழாவில் கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News