இராணிப்பேட்டையில் மகளிர் திருமண நலஉதவிகள்: அமைச்சர் காந்தி வழங்கினார்

இராணிப்பேட்டைசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் நலஉதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

Update: 2022-01-13 12:56 GMT

மகளிர் திருமண நலஉதவிகளை வழங்கிய அமைச்சர் காந்தி

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பி்ல் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தது

நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமைதாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் மகளிர் திருமண உதவிதிட்டங்களை வழங்கினார்

அதில் திருமண நிதி உதவித் திட்டங்கள்:டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புவரை படித்த பெண்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ 25,000 நிதியுதவி தொகையும்பட்டம் (ம) பட்டயம் படித்த பெண்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ 50ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டிற்கு மொத்தம் 1319 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரொக்கமாகவும் ரூ.6,59,50,000/- மற்றும் 8 கிராம் நாணயமும் மொத்தம் ரூ.5-, கோடியே 14 இலட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ.11, கோடியே 73 இலட்சத்து91 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும் 989 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/வீதம் ரொக்கமாகவும் ரூ. 2, கோடியே47 இலட்சத்து 25ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் மொத்தம் ரூ.3,கோடியே 85 இலட்சத்து 71 ஆயிரம்மதிப்பிலான தங்கநாணயமும், ஆக மொத்தம் ரூ.6 கோடியே 32 இலட்சத்து 96ஆயிரம் வழங்கப்பட உள்ளது.மொத்தம் 2308 பயனாளிகளுக்கு நிதி உதவி ரூ.18 கோடியே 68 இலட்சத்து 7 ஆயிரம் மொத்த மதிப்பில் தங்க நாணயம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News