இராணிப்பேட்டையில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

இராணிப்பேட்டையில் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

Update: 2021-06-15 13:04 GMT

இராணிப்பேட்டையில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி அலுவலக வளாகத்தில் 2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்களை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை துவக்கி வைத்தல் மற்றும், பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில். சிறப்பு அழைப்பாளராக கலத்து கொண்ட அமைச்சர் காந்தி முதலில் மாவட்டத்திலுள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 402 குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 2ஆம் கட்ட கொரோனா நிவாரணத் தொகை தலா 2000 மற்றும் 14 மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கி பணியினைத் துவக்கி வைத்தார்,

பின்னர் அவர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் 10 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பசுமை வீடு திட்டத்தில் 10 வீடுகளை வழங்கினார்.

அதனையடுத்து சமூக நலத்துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியப் பெண்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தையல் மிஷன்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் 95 பேருக்கு கொரோனா நிவாரணத் தொகையை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் நவிந்தவர்களுக்கு திருமண உதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் கடந்த 2020-21 நிதி ஆண்டில் மொத்தப் பயனாளிகள் 4368 தேர்வு செய்யப்பட்டனர், அதில் திருமண நிதியுதவித் தொகை பட்டதாரிப் பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் மற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் என வழங்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் பயனாளி ஒருவருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் என்ற அளவின் முதற்கட்டமாக 2511 பயனாளிகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News