வாலாஜாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

வாலாஜாவில் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-04 16:41 GMT

வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

மொத்தம் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Tags:    

Similar News