மிகப்பெரிய அளவிலான எரிசாராயம் பறிமுதல்: கலால் ஏடிஜிபி சந்தீப் ரத்தோர் தகவல்

இராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்ட 14ஆயிரம்லிட்டர் கேன்களை கலால் ஏடிஜிபி சந்தீப் ரத்தோய் நேரில் வந்து பார்வையிட்டார்

Update: 2021-08-09 16:21 GMT

குற்றவாளிகள் சம்பத், வினோத் மற்றும் சேட்டு

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு போலீஸார் வாகன சோதனையில் 35லிட்டர் கொள்ளளவுள்ள 100கேனில் 3500லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்தனர். அப்போது, குற்றவாளிகள் தப்பித்தனர்.

இதனையடுத்து கலால் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தவந்துள்ளனர். இந்நிலையில் போலீஸுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் கலவையடுத்த செய்யாத்து வண்ணம் கிராமத்தில் வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த 35லிட்டர் கொள்ளளவில் 395கேன்களில் 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர் .

இதனையடுத்து தகவலறிந்த கலால் மற்றும் அமலாக்கப் பிரிவுஏடிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் இராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்திற்கு  வந்து  பறிமுதல் செய்த எரிசாராயத்தை பார்வையிட்டார் பின்பு எரிசாராயம் பறிமுதல் செய்து சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினருக்கு சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சோதனையில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின்மதிப்பு ரூபாய் 85 லட்சம் ஆகும்.  இந்த ஆண்டில் மிகப்பெரிய அளவு பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்  இதுவாகும்  என்றார்

இது மிக முக்கிய கட்சி நபர்களை சேர்ந்தவர்களால் வெளிமாநிலங்களான மஹாராஷ்ட்ரா, குஜராத்திலிருந்து கர்நாடகம் வழியாக அவை கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த எரிசாராயம் குறித்து தொடர்புள்ள முக்கிய குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும், அதில் சம்பத், வினோத் 2பேரை விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் முக்கிய குற்றவாளியான கலவை நகர திமுக பிரமுகர் சேட்டு என்பவரை தேடிவருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், அவர் ஊரடங்கு காலத்தில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளத்தனமாக மது விற்பனை ஈடுபடுவதற்காக இந்த வகையான எரிசாராயத்தை கடத்திவந்து கலர் போன்ற சிலவற்றைக்கலந்து பாட்டில்களில் போலி மதுபானம் தயாரித்து  விற்பனை நடந்து வந்தள்ளது. இந்நிலையில், தற்போதும் அது போன்ற போலி மதுபான பாட்டில்களை தயாரிக்க கொண்டுவரப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர்விசாரித்து வருவதாகவும் அவர் இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News