இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை1முதல் ஜமாபந்தி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு

Update: 2021-06-25 15:38 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்,நெமிலி,சோளிங்கர், வாலாஜா,ஆற்காடுமற்றும் கலவை ஆகிய 6தாலூக்கா அலுவலகங்களில் 1430 பசலி ஆண்டுக்கான வரைவு  2020-21க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடக்க உள்ளது.

அதில் ஜூலை 1,2,6,7,8 ஆகிய தேதிகளில் அரக்கோணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ,

ஆற்காட்டில் 1,2,6,7,8 தேதிகளில் ,மாவட்ட வருவாய் அலுவலர்,

வாலாஜாவில் 1,2,6,7 தேதிகளில் சார்ஆட்சியர்(பொறுப்பு)

நெமிலியில்1,2,6,7,8, தேதிகளில் அரக்கோணம் கோட்டாட்சியர்,

சோளிங்கரில் 1,2,6 தேதிகளில்மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)

கலவையில் 1,2,6 தேதிகளில் தனித்துணைஆட்சியர் (சமூக நல பாதுகாப்பு ) ஆகியோர் ஜமாபந்தி அலுவலர்களாக, வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து மனுக்களை ஆய்வு செய்து தீர்த்து வைப்பார்கள்

எனவே தற்போதுள்ள கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள விதிகளின்படியும் அறிவுரைகளின் படியும் அனைத்து தாலூகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட பெட்டியில்  பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை முகக்கவசத்துடன் சமூக இடைவெளிவிட்டு வந்து  போடுமாறு கேட்டுக்கொள்வதாக  மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார் 

Tags:    

Similar News