இராணிப்பேட்டை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க திறப்பு விழா

இராணிப்பேட்டை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் அலுவலகத்தைை தென் மாநில பொது செயலாளர் சண்முகப்பா திறந்து வைத்தார்

Update: 2021-12-12 13:27 GMT

ராணிப்பேட்டை மாவட்ட லாரி உரிமையாளர் நலச்சங்க திறப்பு விழா 

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த  வி.சி மோட்டூரில் இராணிப்பேட்டை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில்,லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தைத் தென்மாநில லாரி உரிமையாளர் சங்க பொது செயலாளர் சண்முகப்பா திறந்து வைத்தார்.

பின்னர் , நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சியில்சண்முகப்பா பேசியதில் ,லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள்  பாதுகாப்பிற்காகவே சங்கம் செயல்பட்டு வருகிறது. அதற்காக, அரசு அனுமதிவழங்கிய எடைகளை மட்டுமே லாரிகளில் ஏற்ற வேண்டும்.இது குறித்து ஓட்டுநர்களுக்கு முறையான அறிவுரைகளை வழங்கவேண்டும் . சங்க விதிமுறைகளை, அனைவரும்  கடைப்பிடிக்கவேண்டும் விதி மீறல்களுக்கு சங்கம் எதற்கும் சங்கம் பொறுப்பேற்காது. லாரி உரிமையாளர்களின் வளர்ச்சிக்கு லாரிஉரிமையாளர்கள் சங்கம் பாடுபடும் என்றார்.

அதனைத்தொடர்ந்து, , செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் தமிழகத்தைவிட டீசல் விலைக் குறைவாக உள்ளதால் தமிழக லாரிகள் கர்நாடகாவில் நிரப்பி வருகின்றனர். இதனால், தமிழக அரசுக்கு மாதா மாதம் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அரசு உடனடியாக கருத்தில் கொண்டு டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும்,தற்போது காலாவதியான 18 சுங்கச்சாவடிகளை அகற்ற முறையான அறிவிப்பு  இதுவரை வெளியிடப் படவில்லை. எனவே,  உடனடியாக அகற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். .

தொடர்ந்து அவர், லாரிகளில், அதிக பாரம் ஏற்றுவதால் அதிகளவில் விபத்துக்கள் நடைபெறுவதாகவும், சாலைகள் மிகவும் பாதிப்படைவதாக கூறிய அவர், லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதே போல், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்தில் ஒளிரும் பட்டை விவகாரத்தில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகவும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை ரத்து செய்து விடுவதாகக் தமிழக முதல்வர் தெரிவித்தார். எனவே,  அதன்மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பேட்டியின் போது சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News