இல்லம் தேடிக் கல்வி திட்டம் அமைச்சர் காந்தி துவக்கி வைப்பு

வாலாஜா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இல்லம்தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் காந்தி துவக்கிவைத்தார்.

Update: 2022-01-03 13:01 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.அருகில் எம்பி ஜெகத்ரட்சகன், 

இராணிப்பேட்டை மவட்டம் வாலாஜா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக்கல்விதிட்டத்தை . தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-21கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டது . அதனால் மாணவர்கள் இடைநின்றல் ஏற்பட்டு கல்வி கற்றலின்றி இருந்து வருகின்றனர் .

எனவே அதனைப்போக்கும் விதமாக நிதியமைச்சரின் சட்டசபை அறிக்கை 2020-21ன்படி இல்லம் தேடி கல்விதிட்டம் கடந்த அக்டோபர் மாதம் 27ந்தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்து மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது .

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாலாஜா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2ஆம் கட்ட இல்லம்தேடி கல்விதிட்டம் துவங்கியது .

நிகழ்ச்சியி்ல் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமைதாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் முன்னிலைவகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்காந்தி திட்டத்தை துவக்கிவைத்தார்.

இத்திட்டமானது மாவட்டத்தில் 1701குடியிருப்புகளில் 3610 , தன்னார்வலர்களைக்கொண்டு இல்லம் தேடிகல்விதிட்டம் செயல்பட உள்ளது. எனவே இத்திட்டத்தில் தன்னார்வலர்களை சேர்க்கும் பொருட்டு 8கலைக்குழுவினருடன் அனைத்து இடங்களிலும் விழிப்பணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தப்பட்டது.

அதன்வாயிலாக, 1முதல்5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு12ஆம் வகுப்பு படித்தவர்களும்6முதல்8ஆம் வகுப்பு உயர்தொடக்க மாணவர்களுக்கு பட்டபடிப்பை முடித்தவர்கள் என மொத்தம்7419 தன்னார்வளர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.அவர்களுக்கு  நடத்தப்பட்ட தேர்வில் தொடக்கல்விக்கு 603,உயர்தொடக்கக் கல்விக்கு 734,தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

பின்பு தேர்வான தன்னார்வலர்களுக்கு்2நாட்கள் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தன்னார்வளர் தங்களுக் கென்று ஒதுக்கீடான மையங்களில் உள்ள இடைநின்ற பள்ளி மாணவர்களுக்கு மாலை 6மணி முதல்7.30வரைகற்பிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்

இத்திட்டத்தின் முலம் மாவட்டத்தில் 50673தொடக்கக்கல்வி,36386உயர்ததொடக்கக்கல்வி என மொத்தம் 85079 மாணவர்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஸ்லம்,கோட்டாட்சியர் பூங்கொடி,ஆற்காடு எம.எல்ஏ ஈஸ்வரப்பன் ,மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயந்தி, மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News