வாலாஜாவில் கெங்கை அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்

வாலாஜாப்பேட்டையில் கச்சாலத் தெரு கெங்கையம்மன் கோயில் திருவிழாவினை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்

Update: 2021-06-29 16:06 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் கச்சால தெருவில் உள்ளகங்கை அம்மன் கோயிலில்121ஆம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

விழாவில்,  காலை அம்மன் சிரசு ஏற்றம் நிகழ்ச்சி  நடந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு விசேஷ ஆரத்திகள் காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து உற்சவர் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா புறப்பாடு தொடங்கியது, அதுசமயம் அம்மனுக்கு பக்தர்கள் பண மாலை அணிவித்தும் , அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய படிமாலைகளை அணிவித்தனர்.

பின்பு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை. அப்பகுதி நாட்டாமை மற்றும் பொதுமக்கள் செய்தனர். 

Tags:    

Similar News