பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சித்தூர் கலவகுண்டா அணைதிறப்பால் பொன்னை, பாலாற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-10-23 15:19 GMT

கனமழைக் காரணமாக பொன்னையற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சித்தூர் கலவகுண்டா அணைதிறப்பால் பொன்னை, பாலாற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கனமழைக் காரணமாக பொன்னையற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கலவகுண்டா அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 4500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பொன்னை அணைக்கட்டிலிருந்து சுமார் 4500 கனஅடி நீர் இரவு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னையாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, மற்றும் பாலாற்றங்கரையோரமுள்ள .தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம்,  விசாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி, உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதியிலுள்ளவர்கள் பதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்றும் வேடிக்கை பார்க்க அதிகம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும்  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Tags:    

Similar News