அதிகாரிகள் அலட்சியம் செய்ததாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் புறக்கணிப்பு

விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகளை நீண்டநேரம் காக்க வைத்து அவமதித்ததாக கூறி விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்

Update: 2021-11-30 16:43 GMT

குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

இராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் பல மாதங்களுக்குப் பிறகு ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு  இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமிலிருந்து  சுமார் 150 க்கும்  மேற்பட்டவிவசாயிகள், மற்றும் சங்க நிர்வாகிகள் வந்து நீண்ட நேரமாக மாவட்ட ஆட்சியர் வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது விவசாயிகள் மத்தியில் போதிய கால நேரங்கள் மற்றும் தகவல்களை  அதிகாரிகள்  சரியாக  தெரிவிக்கவில்லை என்று கூறி வந்தனர். ஆனாலும் அங்கிருந்த அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளமால் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தைக்கண்ட விவசாயிகள் தங்களின் குறைதீர்வு  கூட்டத்தைப் புறக்கனித்து அரங்கை விட்டு வெளியேறினர்.  அப்போது ,வந்த மாவட்ட ஆட்சியர் நேராக  அரங்கத்திற்கு சென்று அங்கிருந்த ஒருசில விவசாயிகளிடம் மட்டும் கோரிக்கைகளைக் கேட்டார்.

இதனால் கூட்டத்தைப் புறக்கணித்து  வெளியில் நின்றிருந்த விவசாயிகள் மற்றும் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் தங்களை அவமதிப்பு செய்து விட்டார் என்று அரங்கம் முனபாகவே நின்று கோஷங்களை எமுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்பதற்காக பல மாவட்டங்களில் வாரம் இருமுறை விவசாய குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.ஆனால்   ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக விவசாய குறைதீர்வு கூட்டத்தினை நடத்துவதில்லை என குற்றம் சாட்டினர்

பின்பு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ 30 ஆயிரம் மற்றும் 2020 -21 ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கோஷமிட்டனர்.

 தொடர்ந்து ,அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல் படாமல் உள்ளதின் காரணமாக தேக்கமடைந்து சேதமான நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் . என்றனர்

மேலும் ,பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நீரினை சேமிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தங்களது கருத்துக்களை தெரிவிக்க வருகை தந்திருந்ததாகவும் ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் விவசாயிகளை புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினர்

மேலும் சம்பவத்தின்போது வந்த மாவட்ட ஆட்சியர் தங்களை கண்டு கொள்ளாதது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகக் கூறி விவசாயிகள் மிகவும்  வருத்தத்துடன் வெளியேறினர்..

Tags:    

Similar News