வாலாஜா அடுத்த முசிறி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

வாலாஜா வட்டம் முசிறி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,திடீர் ஆய்வு மேற்கொண்டார்..

Update: 2022-02-25 14:54 GMT

முசிறி ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த  முசிறி ஊராட்சியில்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் ஆய்வு செய்தார்.

ஆய்வில் அங்கன்வாடி மையம் செயல்படும் விதம், கட்டடிடப் பராமரிப்பை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் தினசரி கிராமத்திற்கு வருவது குறித்து பொதுமக்கள் மற்றும.ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டறிந்தார். பின்பு அங்குள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்குள்சென்று ஆய்வு செய்தார்

அப்பொழுது மருத்துவர் பணி முடித்து வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார், மேலும் நாள்தோறும் பொதுமக்களுக்கு சிகிச்சைஅளித்து வருகிறார் என்று பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் ஆட்சியரிடம் தெரிவித்து பாராட்டி மகிழ்ந்தனர்

மேலும் ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து வீடுகளுக்கும்உறை கிணறு அமைக்கும் திட்டப் பணிகள்,பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டபணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார் .

பின்னர் ஊராட்சித்தலைவரிடம் மக்களின் தேவைகளை முறையாக கேட்டறிந்து தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிகளவு மரங்களை நடவேண்டும் எனவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

Tags:    

Similar News