வாலாஜாப்பேட்டையில் கலெக்டர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு

வாலாஜாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2021-08-06 14:35 GMT

துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்யும் ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடந்த 1ந்தேதிமுதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். வாலாஜாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு பற்றி பேசினார் .

நோய் தொற்றிலிருந்து பெருமளவு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் சமீபகாலமாக ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் இதுவரை யாரும் இறக்கவில்லை. அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடித்தாலே நோய் தொற்றிலிருந்து நாமும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, வாலாஜாவில்உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை எந்தி கொண்டு துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்யும் ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் .

நிகழ்ச்சியில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன்,  நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் ,ஆய்வாளர் காண்டீபன் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் காமாட்சி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் அக்பர் ஷரிப் .குமார் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News