இளைஞர்களுக்கு கட்டாய தொழிற்பயிற்சி: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை.

Update: 2021-08-28 16:23 GMT

இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக வழங்குவது குறித்து தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆலோசனை நடத்தினார்.

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் மாவட்ட திறன் பயிற்சி மையம் சார்பில் தனியார் தொழில் நிறுவனங்களில் படித்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் கட்டாய தொழிற் பயிற்சியினை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று  நடந்த்து இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூட்டத்தை  துவக்கி வைத்துபேசினார். அதில், தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டு நிறுவனத்தால் தொழிற்பயிற்சி கல்விகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் கட்டாய தொழிற்பயிற்சி சட்டத்தின் படி, அனைத்து தனியார் தொழில் நிறுவன, மொத்த பணியாளர்களில் 10 முதல் 15 சதவீதம் தொழிற்கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும். இந்த நடைமுறையினை, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் தொழிற்நிறுவனங்கள் கட்டாயம் செயல்படுத்திட வேண்டும்.

பல நிறுவனங்கள் தொழிற்பயிற்சி வேலைகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும், கட்டாயம் அனைத்து நிறுவனங்களும் இந்த சட்டத்தை நடைமுறைபடுத்திட வேண்டும். மத்தியஅரசு தெரிவித்துள்ள சதவீத அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும். பயிற்சியில் சேர்ந்திடும் மாணவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியில் இருப்பதில்லை என்று  தெரிவிக்கின்றனர். காரணம் குறைவான ஊதியம் என்று தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனைகளுக்கு, தீர்வு காண தனியார் தொழில் நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் தொழிற்கல்வி நிறுவனங்கள் வாயிலாக திறன் படைத்த மாணவ மாணவிகள் ஆண்டுதோறும் வெளியில் வருகின்றனர். திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களும் வளர வேண்டும், நிறுவனமும் லாபம் ஈட்ட வேண்டும்.  இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர்  முகமதுகனி, உதவி இயக்குநர் திறன் பயிற்சி மையம் சீனிவாசன், பெல் நிறுவன மனிதவள மேலாளர் ஜாய் மற்றும் தனியார் நிறுவன மனிதவள மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News