இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட ஆட்சியர்

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்

Update: 2022-02-26 07:00 GMT

இல்லந்தேடிக்கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் படைப்புகளை ராணிப்பேட்டை  கலெக்டர் பார்வையிட்டார்

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லந்தேடி திட்டத்தில் கல்விகற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சியின்போது அவர்களின் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடிகல்வி திட்டத்தில் வாலாஜா ஒன்றியத்தைச்சேர்ந்த பயிற்சிமுடித்த தன்னார்வலர்கள் 120 பேர் தங்களின் பயிற்சியின் படைப்புபளை பார்வைக்கு வைத்தனர்.  அவற்றை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் பார்வையிட்டார். அப்போது அவர்களிடம். பயிற்சிகள் பற்றியும் கற்பிக்க வழங்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கற்பிக்கும் முறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். அப்போது ,முதன்மைக் கல்வி அலுவலர் உஷா,மற்றும் மேற்பார்வையாளர்கள் தேன்மொழி,செந்தில்குமார் ,தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News