இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 301753 பேர் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்

Update: 2021-12-09 13:33 GMT

கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில்  நகராட்சி, பேரூராட்சிகளில்  உள்ள வாக்காளர்கள்  பட்டியல்  அரசியல். கட்சியினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில்  இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது

அதில் அரக்கோணம், ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜாப்பேட்டை , இராணிப்பேட்டை நகராட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம், திமிரி, அம்மூர்,கலவை, நெமிலி, பணப்பாக்கம், விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்த வாக்காளர்கள் 301753 பேர் உள்ளதாக இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல்அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News