இராணிப்பேட்டையில் வாக்காளர் வரைவுபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் வரைவுப்பட்டியலை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார்

Update: 2021-08-31 10:09 GMT

இராணிப்பேட்டை மாவட்ட வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள  ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021க்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்களர்பட்டியலை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அவரது அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் வெளியிட்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவிக்க உள்ளது. அதில் மாவட்டத்திலுள்ள 7ஒன்றியங்களுள்288 கிராமப் பஞ்சாயத்துகளில் வரைவு செய்யப்பட்ட1410 வாக்குச்சாவடிமையங்கள் உள்ளது. அதில் 6லட்சத்து67ஆயிரத்து 237வாக்காளர்கள் உள்ளனர். அவை அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி மற்றும் வாலாஜா ஆகிய ஓன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள ஆண்,பெண்,மற்றும் இதர வாக்காளர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்களிடன் கூடிய வரைவுபட்டியல் விபரங்களாக வெளியிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், அவற்றை அரசியல் கட்சியினர் சம்பந்தபட்ட ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து 3-9-2021க்குள் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். வெளியீட்டின்போது, ஊரக திட்ட இயக்குநர் முகமை லோகநாயகிமற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News