ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

இராணிப்பேட்டை பாரதிநகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

Update: 2021-06-25 14:07 GMT

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் 

தமிழகத்தின் 38வது மாவட்டமாக வேலூரிலிருந்து இராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை கடந்த 2019 நவம்பர் 28ல் அன்றைய முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி துவக்கி வைத்தார். இராணிப்பேட்டை அருகே உள்ள தமிழ்நாடு கால்நடை நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையத்தையொட்டி உள்ள இடத்தில் ரூ.112 கோடி மதிப்பில் புதிய அலுவலம் கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு  தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பாராஜ் இன்று அலுவலக கட்டுமானப்பணிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார் அதில் கட்டிடப்பணிகள் குறித்த சந்தேகங்களை அங்கிருந்த பொறியாளர்கள்மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து பணிகளை திட்டமிட்டப்படி விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார.

பின்னர் இராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே நடைபெற்று வரும். இரயில்வே மேம்பால பணி நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நான்குவழி சாலைக்கான  சாலைவிரிவாக்கம் குறித்து கேட்டறிந்தார்.  பணிகள் நடக்கும் போது   பொது மக்களுக்கு  எந்த விதமான பாதிப்பு  வராமல் பணிகளைத் தொடர ஆலோசனைகளை வழங்கினார்.  இதனையடுத்து அவர் முத்துக்கடை ஜங்ஷனுக்குச் சென்று சாலை விரிவாக்கப்பணி  நடக்கும் போது ஏற்படும்  போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகள் குறித்து போக்குவரத்து அதிகாரிகள், பொறியாளர்களுடன் ஆலோசித்தார்.

Tags:    

Similar News