பேரூராட்சி, நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி, நகராட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது

Update: 2021-11-18 06:00 GMT

வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

தமிழகத் தேர்தல் ஆணையம் பேரூராட்சி,நகராட்சி தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை விரைவில் அறிவிக்க உள்ளது.

அதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் அரக்கோணம் 74, ஆற்காடு 59, மேல்விஷாரம் 42, இராணிப்பேட்டை 47 மற்றும் வாலாஜா 32 என 254 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது

அதேபோன்று, பேரூராட்சிகள் அம்மூரில் 15, காவேரிப்பாக்கம் 15, நெமிலி 15, தக்கோலம் 15, பணப்பாக்கம் 15, விளாப்பாக்கம் 15,கலவை 15 மற்றும் திமிரியில்17 ஆகிய 122 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. .

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளதைத் தொடர்ந்து,  இராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில்  அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்களின் முன்னிலையில் இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்டது.

பின்னர் பாரத மிகுமின் நிறுவன பொறியாளர்கள் 1460 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 830 கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றை   சரி பார்த்தனர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார்.

சரிபார்ப்பு பணியின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா மற்றும் அதிகாரிகள் உடனிருந்து கவனித்து வந்தனர்..

Tags:    

Similar News