இராணிப்பேட்டையில் குடியரசு தினவிழா: கலெகடர் தேசியக் கொடியேற்றினார்

இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேசிய கொடியை ஏற்றினார்

Update: 2022-01-26 13:51 GMT

குடியரசு தின விழாவையொட்டி இராணிப்பேட்டையில் கொடியேற்றி மரியாதை செலுத்தும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

ராணிப்பேட்டை மாவட்டம் நிர்வாகம் சார்பில் இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டின் 73வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடந்தது.  விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தேசியக் கொடியேற்றி பறக்கவிட்டார். அதைத் தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்பு , மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக 19 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் , மற்றும் பல்வேறு அரசுத்துறை 338 அலுவலர்கள், மருத்துவர்கள் பணியாளர்கள் காவலர்கள், என 388 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்

பின்னர்,மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலமாக 5 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் இலங்கை மறுவாழ்வு மையம் ,சமுதாய முதலீட்டு நிதியும் , தாட்கோ மூலமாக பயனாளிகள் 2 பேருக்கு ரூ.4 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தொழில் முனைவோர் திட்டமும், மாவட்ட தொழில் மையம் மூலமாக 3பேருக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான தொழில்திட்டமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5பேருக்குரூ. 26 ஆயிரத்து 984 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப்பெட்டியும் வழங்கப்பட்டது .

மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின்மூலமாக 2 பேருக்கு ரூ. 1 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான இணைச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 பேருக்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 3 பேருக்கு ரூ. 3 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தின் மூலமாக 4 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூகபாதுகாப்பு திட்டத்தின் மூலமாக 20 பயனாளிகளுக்கு ரூ. 2 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் மூலமாக 10 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகை என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ. 37 இலட்சத்து 96ஆயிரத்து 184 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

குடியரசு தினவிழாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகளை அழைத்து கௌரவிப்பது தவிர்க்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொல்காப்பியர் தெருவில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் என்பவருக்கு சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் நேரடியாக வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பூங்கொடி, சிவதாசு, துணை ஆட்சியர்கள் சேகர், இளவரசி, தாரகேஸ்வரி, துணை இயக்குநர் (வேளாண்மை) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணக்குமார், வட்டாட்சியர்கள் பாபு,விஜயகுமார், ஆனந்தன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் புகழேந்தி கணேஷ், வெங்கடகிருஷ்ணன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் இராமலிங்கம், மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News