கோயில் விழாக்களில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசி பரமபாத வாசல் திறப்பு உள்பட கோயில் விழாக்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்படுகிறது என்றார்

Update: 2022-01-10 13:41 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

கோயில் விழாக்களில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய  தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய தடைவிதிப்பதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட தகவல்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கோயில்களில் நடக்க உள்ள வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. எனவே கோயில் விழாக்களில் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்ய இம்மாதம் 31ஆம் தேதிவரை விழாக்கள் நடத்த அவ்வப்போது அரசு விதிக்கும் தளர்வுகளுக்குட்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது . இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வைணவக் கோவில்களில் 13ந்தேதி நடக்க உள்ள சொர்க்கவாசல் திறப்பு மற்றும் இதர கோயில் திருவிழாக்களை வசதிக்கேற்ப யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..

மேலும் , கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், காவல்துறை , வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கண்காணிக்கவும்  இது குறித்த விளம்பரப் பலகையை உடனடியாக கோவில்களின் முன்பு வைக்க வேண்டும்.  கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுக்குமாறும், நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News