இராணிப்பேட்டை: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதி மொழி ஏற்பு

ராணிப்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2021-06-12 11:41 GMT

ராணிப்பேட்டையில் குழந்தைகள் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தி வேலை வாங்குவது சட்டபடி குற்றமாகும் அதனை நினைவு கூறும் விதமாக  சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்திற்காக வாகனம் ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்ப்பது குறித்து விழிப்புணர்வு படங்களை வைத்து பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்குவதற்காக சைல்டு லைன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற தொண்டு நிறுவனம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரசார வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிலாஸ்டன் புஷ்பராஜ் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் .இதில் சைல்டு லைன் மற்றும் hand-in-hand தொண்டு நிறுவனத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க  அதை  அலுவலர்கள்,,ஊழியர்கள் மற்றும் தொண்டு அமைப்பினர் அனைவரும் திரும்பக்கூறி உறுதி மொழி ஏற்றனர்

Tags:    

Similar News