அண்ணா வீரப்பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள்: கலெக்டர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022க் கான அண்ணா வீரப்பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2021-12-06 12:32 GMT

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் 

தமிழக அரசின் சார்பில் இயற்கை சீற்றம், பேரிடர் ஆபத்துகள் போன்ற ஏதிர்பாரா நிகழ்வுகளில் மனிதஉயிர்கள் மற்றும் உடைமைகளை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்களை செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுதினத்தன்று அண்ணா வீரப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022க்கான விருது பெறுவதற்கு இராணுவத்தில் அல்லாதோர் பொதுமக்கள், சீருடைப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்  ஆவர்.

சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் மிக்க இத்தகைய வீரசேவைப் புரிந்தவர்களைக்  கௌரவிக்கும் விதத்திலும் இவர்களைப்போல மற்றவர்களும் ஆபத்து காலத்தில் உதவிகளை செய்ய ஊக்குவிக்கும் விதத்தில் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விருதினைப்பெற 2021 ஆம் ஆண்டில் ஆற்றிய வீரசேவையைத் தெளிவுபடுத்தி உள்ளடக்கிய கருத்துருக்கள் தமிழிலும்  ஆங்கிலத்திலும் , குறைந்தபட்சம் 250 வார்த்தைகள் மற்றும் உரிய சான்றுகளுடன் நாளிதழ்களில் வந்த செய்திக் குறிப்புகள் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இயற்கைசீற்றம், பேரிடர் ஆபத்துக்கள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து , விபத்துக்கள், ஆபத்து காலங்களில்  மற்றும்  இயற்கை பேரழிவுத்  தருணங்களில் விலைமதிப்பில்லா  மனித  உயிர்களைக் காத்த சமுதாயத்திலுள்ள இராணுவத்தில்  அல்லாதவர்கள், பொதுமக்கள், சீருடைப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்..

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும், இவ்விருது பெற தகுதியானவர்களை முதலமைச்சர் உயர் விருது குழுவிற்கு பரிந்துரைக்கும்.

மேலும், இதுதொடர்பான விபரங்களை அறிய தமிழக அரசின் இணையதளம் http://awards.tn.gov.in மூலம் அறிந்தபிறகு விண்ணப்பங்களை இணையதளத்தில் உரிய படிவங்களில் மட்டுமே சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்..

விண்ணப்பங்கள் , மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெறப்படும்  முழுமையாகப்பூர்த்தி செய்யப்பட்ட தகுதியான   விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிலான குழு பரிசீலித்து மாநிலக்குழுவிற்கு பரிந்துரைக்கும்.

விண்ணப்பங்கள் வந்து சேரக்கடைசித்தேதி 7-12-2021ஆகும்

மேலும் விபரங்கள்அறிய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை 7401703483 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம. என்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்து உள்ளார்..

Tags:    

Similar News